சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பங்கேற்றார். மேலும் அங்கு இன்வெஸ்ட் இந்தியா பெவிலியனை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் பேசிய அவர், முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அனைவரும் இந்தியாவிற்காகத்தான் உழைப்பதாகவும் கூறினார். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மையான உற்பத்தி சக்தியாக விளங்குவதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம் தெரிவித்தார்.