திடீரென திரும்பிய லாரி - பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து ஒன்று, சாலை பள்ளத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது முன்னே சென்ற சரக்கு லாரி திடீரென சாலையில் திரும்பியதால், விபத்தை தவிர்க்க அரசு பேருந்து வலது பக்கமாக திரும்பியது. இதில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்த சாலையோர பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.