கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைப்பெற்று வருவதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாய்பாபா காலனி பகுதியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மாற்றி அமைக்கப்பட்ட வழிகள் குறித்தும், வாகனங்கள் எந்தெந்த வழியில் செல்ல வேண்டும் என்பது பற்றியும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.