நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை/120 அடி கொண்ட மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது/மேட்டூர் அணையில் நீர் திறப்பு 22,500 கன அடியிலிருந்து 31,000 கன அடியாக அதிகரிப்பு/நீர் திறப்பு அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை/காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரிப்பு/நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் முழுவதுமாக நீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்/அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 22,500 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக 8,500 கன அடியும் நீர் திறப்பு