சர்வ சாதாரணமாக பொதுவெளியில் கவுன்சிலரிடம் பணம் பெற்ற SI..பாய்ந்த அதிரடி நடவடிக்கை

Update: 2025-07-04 02:21 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில், கவுன்சிலரிடம் பணம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து முனை சந்திப்பு அருகே, திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டம் முடிவடைந்த பின் நகராட்சி கவுன்சிலரிடம், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தியாகு என்பவர் பணம் பெற்ற வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்