மாணவன் தற்கொலை - போராட்டம் - 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Update: 2025-06-25 04:33 GMT

திருச்செந்தூர் அருகே 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டு பாடம் எழுதாததால் பள்ளி ஆசிரியர் சத்யா, முத்துகிருஷ்ணனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவன் முத்துகிருஷ்ணன் தனது மரணத்திற்கு 4 ஆசிரியர்கள் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை போலீசார் மீட்ட நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே ​இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்