"விபத்து அல்ல கொலை" - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
சென்னையில் கார் மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி திருமங்கலம் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. சென்னை திருமங்கலம் அருகே பைக் மீது சொகுசு கார் மோதியதில் நிதின் சாய் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இந்த சூழலில், திமுக நிர்வாகியின் பேரனும் கல்லூரி மாணவருமான சந்துரு என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்துடன் விபத்தை ஏற்படுத்தியதாக நிதினின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சந்துருவை கைது செய்ய வலியுறுத்தி நிதினின் குடும்பத்தார், நண்பர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.