உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

Update: 2026-01-19 07:47 GMT

சென்னை மயிலாப்பூரில், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூர் பி.வி.கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான ஜெயதீபா, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடப்போவதாக பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டில் சமைத்ததை சாப்பிடுமாறு பெற்றோர் கூறியதால், கோபத்தில் அறைக்குள் சென்ற ஜெயதீபா கதவை பூட்டிக்கொண்டதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் ஜன்னல் வழியாக திறந்து பார்த்தபோது, ஜெயதீபா தூக்கில் தொங்குவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலின் பேரின் விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்