Sivaganga | Protest | ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் - சிவகங்கையில் பரபரப்பு
மனிதக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
திருப்புவனம் அருகே உள்ள தேளி கிராமத்தில் மனிதக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஆலை அமைந்தால் தேளி மட்டுமின்றி கணக்கன்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்றும், விவசாய நிலங்கள் மாசடையும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.