`புலி’யாக மாறிய `தெரு நாய்கள்’ - 21 ஆடுகளை கடித்து ருசித்து வெறியாட்டம்

Update: 2025-08-27 13:33 GMT

Stray Dogs | `புலி’யாக மாறிய `தெரு நாய்கள்’ - 21 ஆடுகளை கடித்து ருசித்து வெறியாட்டம்

வெறி நாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் பலி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வெறி நாய்கள் கடித்ததில் ஆடுகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னாங்கூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார் இந்த நிலையில் வழக்கம் போல் ஆட்டு பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதால் அங்கு வந்த பார்த்த போது 4 வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதில் 21 ஆடுகள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை உள்ளது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஆட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வெறி நாய்களைப் பிடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்