விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறிநாய் கடித்ததில் 2 சிறுவன் உட்பட பத்துக்கும் மேற்பட்டோருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.