திருவள்ளூர், திருத்தணி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தெரு நாய் கடித்து குதறியதில் மூதாட்டி உட்பட 3 பேருக்கு பலத்த காயம். மூதாட்டியின் கை, கால், முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், காயமடைந்த பெண் தேவகி மற்றும் மூதாட்டி இருவரும் திருத்தணி அரசு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெங்கடேசன் என்பவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெரு நாய் கடி குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.