ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. சாலையில் இறங்கி கதறிய மக்கள்..
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - சாலை மறியல்
இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் கைது செய்தது. இதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.