``கண்டுக்கலேன்னா ஆக்ஷன் கன்பார்ம்’’ - அதிகாரிகளை ஸ்ட்ரிக்ட்டாக எச்சரித்த சீனியர் எஸ்பி
பள்ளி மாணவிகளின் புகாரை கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். காரைக்கால் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பேசிய முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, பள்ளி மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக புகாரளிக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், புகாரின் ரகசியம் காக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.