ரோட்டை மறைத்த பனிமூட்டம்.. மலைப்பாதையில் செல்ல முடியாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டை மறைத்த பனிமூட்டம்.. மலைப்பாதையில் செல்ல முடியாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 48 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சேலம் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் மாலை நேரத்தில் பெய்த சாரல் மழையால் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக மலைப்பகுதிக்கு பயணம் மேற்கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.