Sivagangai | TN Police | காட்டுக்குள் கறி விருந்து | ட்ரோனில் சிக்கிய தலைமறைவு குற்றவாளிகள்

Update: 2025-11-24 12:18 GMT

வனப்பகுதியில் கறி விருந்து - 2 தலைமறைவு குற்றவாளிகள் கைது

சிவகங்கை மாவட்டம் கீழக்குளம் அருகே நண்பரின் பிறந்த நாளையொட்டி, வனப்பகுதியில் கறி விருந்து நடத்திய தலைமறைவு குற்றவாளிகள் இருவர் டிரோன் மூலம் சிக்கினர். டிஎஸ்பி தலைமையிலான 40 பேர் கொண்ட சிறப்பு குழு அவர்களை டிரோன் மூலம் கண்காணித்து சுற்றிவளைத்தது. இதையறிந்த ரவுடிகள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரவணன், பவுல்பாண்டி ஆகியோர் மட்டும் சிக்கினர். சம்பவ இடத்திலிருந்து 2 வாள்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்