Sivagangai Shelter Home Issue | டாய்லெட் ஜன்னல் வழியே எஸ்கேப்பான சிறுமிகள்

Update: 2025-12-12 04:03 GMT

அரசு காப்பகத்தில் மாயமான 3 சிறுமிகள் மீட்பு

சிவகங்கையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாயமான சிறுமிகள் 3 பேரை மீட்ட போலீசார், இளைஞர்கள் இருவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். தேவகோட்டை, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள், காதல் உள்ளிட்ட பிரச்சினையால் வீட்டைவிட்டு வெளியேறினர். அந்த சிறுமிகளை போலீசார் மீட்டு, சிவகங்கையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். கடந்த 7ம் தேதி, அதிகாலையில் கழிப்பறையில் உள்ள ஜன்னலை பயன்படுத்தி 3 சிறுமிகளும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், காளையார்கோவில் அருகே தனது வீட்டிற்கு சென்ற சிறுமியை மீட்டனர். மற்ற இரண்டு சிறுமிகளும் மதுரையில் வெவ்வேறு இளைஞர்களுடன் தங்கியது தெரியவந்த நிலையில், சிறுமிகளை மீட்டு, காளிமுத்து, சூரியவேல் ஆகிய இரண்டு பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்