ADMK | Erode | Gun | போலீஸ் ஸ்டேஷனில் முடிந்த குடும்பத் தகராறு - அதிமுக பிரமுகர் வீட்டில் துப்பாக்கிச்சூடு
கோபிசெட்டிபாளையம் அருகே குடும்ப தகராறில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட அதிமுக பிரமுகரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஆண்டவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். அதிமுக ஈரோடு மேற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், கணவரான கோபிநாத் தாக்கியதாக மனைவி பிருந்தா, தனது தந்தை மற்றும் சகோதரர் தினேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோபிநாத்தின் வீட்டிற்கு சென்ற தினேஷ்குமார், கோபிநாத்தை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டுள்ளார்.
இதில் பயந்துபோன தினேஷ்குமார் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் போலீசார் கோபிநாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.