இன்று முதல் ரயிலில் பயணிக்க கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
அதன்படி ஏசி அல்லாத Mail மற்றும் Express ரயில்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் பயண கட்டணத்தோடு கூடுதலாக கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும் ,ஏசி வகுப்பில் கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.அதேசமயம், 500 கிலோமீட்டர் வரையிலான இரண்டாம் வகுப்பு பயணம் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை
500 - 1500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.5ம், 1501- 2500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10ம், 2500-3000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.15ம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 1 பைசாவும்,அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.