தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் -அதிர்ச்சி குற்றச்சாட்டு

Update: 2025-05-14 03:43 GMT

பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - Chennai-ல் அதிர்ச்சி குற்றச்சாட்டு

பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

சென்னை மாநகராட்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மண்டலக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், 7வது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக 84 வது வார்டு உறுப்பினர் ஜான் பேசுகையில், தன் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர்களால் பாலியல் தொல்லை நடப்பதாக அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு முறையான விசாரணை செய்து சம்பந்தபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்