சூசகமாக சொல்லி பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்

Update: 2025-05-02 03:05 GMT

அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் கொள்முதல் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூரில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கபட்ட லேப்டாப் கொள்முதல் செய்ததில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனத் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்