வைகையில் இறங்கும் கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைப்பு

Update: 2025-05-11 04:49 GMT

வைகையில் இறங்கும் கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலை, கிளி, பட்டு வஸ்திரம் போன்றவை மதுரை கள்ளழகருக்கு அனுப்பப்பட்டன. சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் கள்ளழகருக்கு இவை அணிவிக்கப்பட உள்ளன. முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்