ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு! அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
பள்ளி திறப்பு - முன்னேற்பாடுகள் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனை
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் இது தொடர்பாக காணொலி வாயிலாக உரையாடிய அவர்,
இடைநிற்றல் செய்துள்ள மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும், இக்கல்வியாண்டில் கல்வி அலுவலர்கள் அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.