Auto Accident || சாலையை கடக்க முயன்ற மாணவி - எமன் போல் ஆட்டோ ஓட்டி வந்த போதை ஆசாமி.. நடந்த விபரீதம்

Update: 2025-06-28 03:44 GMT

கோவையில் போதையில் இயக்கப்பட்ட சரக்கு ஆட்டோ மோதி, சாலையை கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுக்கரை அறிவொளி நகரில் வசிக்கும் பாலன்- சாவித்திரி தம்பதியின் மகள் சவுமியா, உக்கடம் கெம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி முடிந்து, வீடு திரும்பும் வழியில், சாலையை கடக்க முயன்ற சௌமியா, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போதையில் வாகனத்தை இயக்கிய கண்ணன் மற்றும் வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த ரா​ஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்