School | MLA | டீக்கடை டூ பள்ளிக்கூடம்.. வேலைப்பார்த்த மாணவியை பள்ளி சேர்த்த எம்.எல்.ஏ
புதுக்கோட்டையில், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பெற்றோரை இழந்த நிலையில், 11ஆம் வகுப்பில் சேர முடியாமல், டீக்கடையில் வேலைப்பார்த்து வந்த மாணவியை, புதுக்கோட்டை MLA முத்துராஜா பள்ளியில் சேர்த்துவிட்ட சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. டீக்கடையில் வேலைப்பார்த்து கொண்டு இருந்த மாணவியை தனது காரிலேயே அழைத்து சென்ற MLA முத்துராஜா, மாணவியை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்த்து வைத்து மாணவிக்கு கல்விக்கு ஆகும் செலவை, தானே ஏற்றுக் கொள்கிறேன் என உறுதி அளித்து உள்ளார். இதற்கு எம்எல்ஏ விற்கு பலரும் தங்களது பாராட்டுகளை கூறி வருகின்றனர்.