"என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா!" சதுரகிரி கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாசி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.