Saravana Stores | சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் இயக்குனர் ரோஷன் ஸ்ரீரத்தினம் - லாக்ஷினி திருமணம்
சென்னையில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் இயக்குனர் ரோஷன் ஶ்ரீரத்தினம், லாக்ஷினி திருமணம் நடந்தது.
திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்சன் செண்டரில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி - சுனிதா தம்பதி மகனும், நிறுவனத்தின் இயக்குனருமான எஸ்.ரோஷன் ஶ்ரீரத்தினம், ஶ்ரீகணேஷ் கிளாஸ் அண்ட் பிளைவுட்ஸ் நிறுவனத்தின் அதிபர் எம்.சுந்தர்ராஜ் - மஞ்சு தம்பதி மகள் லாக்ஷினி ஆகியோரின் திருமணம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் மணமகள் லாக்ஷினியின் கழுத்தில் மணமகன் ரோஷன் ஶ்ரீரத்தினம், மாங்கல்யம் கட்டினார். புதுமண தம்பதிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தொழில் அதிபர்கள், உறவினர்கள், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.