திருவண்ணாமலையில் மேக வெடிப்பு காரணமாக சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் முழங்கால் அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆறு மாதங்களுக்கு முன்பு, மேக வெடிப்பால் பல மணி நேரம் பெய்த கனமழையால் அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் மழை பெய்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.