Salem Central Jail | மாமியார் Gpay-வில் மாப்பிள்ளை செய்த செயல் - அதிர்ச்சியில் சேலம்
மாமியாரின் ஜிபே-வில் பணம் பெற்று மோசடி - சிறை வார்டன் சஸ்பெண்ட்
சேலம் மத்திய சிறையில், பேக்கரி பொருட்கள் விற்பனை பணத்தை முறைகேடாக பெற்ற சிறை வார்டன் சுப்பிரமணியம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக பேக்கரி பொருட்கள் விற்பனை குறித்த வரவு - செலவு கணக்கு முறையாக காட்டப்படவில்லை என தெரிகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது, சிறை வார்டன் சுப்பிரமணியம், தனது மாமியாரின் ஜிபே கணக்கு மூலம் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சேலம் சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.