Sabarimala Temple | எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் - திணறும் போலீஸ்
சபரிமலையில் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால், போலீசார் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் திணறினர். நேற்று முன் தினம் மண்டல காலை பூஜைகள் தொடங்கிய நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தும் ஐயப்பனை தரிசிக்க முடியாத பலர், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மறுபுறம், தடுப்புகளில் ஏறி குதித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முண்டியடித்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. எதிர்வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், மத்திய அதிவேக அதிரடிப்படை, பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் சபரிமலைக்கு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது