"பழனி கோயிலில் ரோப் கார் இயங்காது" - முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பழனி முருகன் கோயில் ரோப்கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் பக்தர்கள் வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.