Road Accident | மரத்தில் மோதி சிதறிய கார்.. பறிபோன 3 மாணவர்கள் உயிர் தூத்துக்குடியை அதிர வைத்த கொடு.
தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே அவர்கள் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. மழை பெய்தபோது ஏற்பட்ட இந்த விபத்தில், காரில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராகுல் ஜெபஸ்டியன், சாரூபன், முகிலன் ஆகியோர் உயிரிழந்தனர். கிருத்திக் மற்றும் சரண் ஆகியோர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.