முதல்வர் Revanth Reddy பற்றி அவதூறு செய்தி.. Telangana-வில் 2 பெண் பத்திரிகையாளர்கள் கைது

Update: 2025-03-13 09:09 GMT

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக, 2 பெண் பத்திரிகையாளர்களை ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு செயலாளர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதில், சம்பந்தப்பட்ட வீடியோவால் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் ரேவதி மற்றும் சந்தியா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்