சேலம் அரசு மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவில் அட்டகாசம் செய்யும் எலிகளால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை எலிகள் தின்பதோடு, அங்குள்ள பொருட்களை அவை சேதப்படுத்தவதாகவும் நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கேள்வி எழுப்பும் நோயாளிகளுக்கு, மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.