விறுவிறுவென எகிறும் நீர்மட்டம்.. காவிரி கரையோர மக்களுக்கு அடித்த அபாய மணி

Update: 2025-07-24 05:22 GMT

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் எந்தநேரமும் 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, மீன்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்