கோவை வைதேகி நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூலுவப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் அபிமன்யூ தனது நண்பருடன் டூ வீலரில் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை காட்டு யானையை சுரேஷ் அபிமன்யூவை துரத்திச் சென்று தாக்கியதில், அவர் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.