தன்னிடம் இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ளனர், மீதமுள்ள மூன்று எம்.எல்.ஏக்களும் வரக்கூடிய சூழல் உள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். ஓசூரில் பாமகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸ் மகள் காந்திமதி, சேலம் எம்எல்ஏ அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 12 தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.