திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை முதலே விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் பிற்பகலில் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, வல்லூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் வாகனங்களில் செல்வோர் அவதியடைந்துள்ளனர்.