ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோடு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்ட போது, எஸ்4 பெட்டியில் கஞ்சா இருந்ததை கண்டு பறிமுதல் செய்த போலீஸார், 13 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த அபினேஷ் திவாரி என்பவரை கைது செய்தனர். மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.