Rabies | தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் மட்டும் 10,479 பேர்.. அலட்சியத்தால் பலியான உயிர்கள்..
திருவண்ணாமலை மாவட்டம், புது சானிப்பூண்டி பகுதியில், நாய் கடித்து 6 மாதங்கள் ஆகியும் சிகிச்சைப் பெறாமல் அலட்சியமாக இருந்த ஜான் ஆண்ட்ரூஸ் என்பவர் ரேபிஸ் நோய் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 479 பேரை நாய் கடித்த நிலையில், இவருடன் சேர்த்து ரேபிஸ் நோய் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து நாய் கடிக்கு தடுப்பூசி அவசியம் போட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.