கடைகளை இடிக்க எதிர்ப்பு | வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளால் பரபரப்பு

Update: 2025-05-21 04:25 GMT

கடைகளை இடிக்க எதிர்ப்பு - வியாபாரிகள் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள சேதமான வணிக வளாகங்களை இடித்து, 36 புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேதமான பகுதியை இடிக்கச் சென்ற அதிகாரிகளிடம், முறையான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து, முறையான அறிவிப்பு வழங்கி, இடிக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்