இன்று முதல் விலை உயரும் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட்..! எவ்வளவு தெரியுமா..?

Update: 2025-04-22 02:57 GMT

சென்னையில் அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜல்லி ஒரு யூனிட் 4000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாகவும்,

எம்.சாண்ட் 5000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாகவும், பி.சாண்ட் 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாகவும் உயரும் என கல்குவாரி கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்