பூ விற்கும் மாற்றுத்திறனாளி கைம்பெண்ணிற்கு உதவிய பிரேமலதா விஜயகாந்த் - நெகிழ்ச்சி காட்சி

Update: 2025-05-03 03:25 GMT

தேமுதிக அலுவலக வாசலில் பூ விற்கும் மாற்றுத்திறனாளி கைம்பெண்ணிற்கு, நிழற்குடையை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். அவரிடம் நலம் விசாரித்த பிரேமலதா, கணவர் இல்லை என கவலைப்பட வேண்டாம் என்றும் விரைவில் விஜயகாந்த் அருளால் தங்கள் மகளுக்கு திருமணம் நடைபெறும் என்றும் நம்பிக்கை வார்த்தைகளை கூறினார். கைம்பெண்மணிக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் சொல்லி உதவிய வீடியோ தற்போது பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்