கேரளாவில் போதைபொருள், நடிகைக்கு இடையூறு போன்ற விவகாரங்களில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ குடும்பத்தோடு காரில் பெங்களூரு நோக்கி செல்லும்போது தர்மபுரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்தார்.. அவரது தந்தை c.o.சாக்கோ(72) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது தாயார் மரியா கார்மல் படுகாயம்.இவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துலகல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது