Poovai Jagan moorthy | பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் மனு இன்று விசாரணை...

Update: 2025-06-16 03:32 GMT

பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் மனு இன்று விசாரணை...

கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை இன்று (ஜூன் 16) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்த நிலையில், ஏற்கனவே இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்