பொள்ளாச்சியில் திடீரென வெளுத்தெடுத்த கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்

Update: 2025-04-04 08:48 GMT

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக திருநீலகண்டர் வீதியில் உள்ள நியாய விலை கடையில் தண்ணீர் புகுந்தது கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி . பருப்பு,சர்க்கரை மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமாகின. அதேப்போல் தனியார் மருத்துவமனை முன்பு மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் பல்லடம் சாலை, பொள்ளாச்சி கடைவீதி ஆகிய பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்