"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு...யாரும் சொந்தம் கொண்டாட முடியாது"- கார்த்தி சிதம்பரம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நிதி கொடுப்பதை குறை சொல்ல கூடாது எனவும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைகழக வழக்கையும் நியாயமான முறையில் நடத்தி நியாயமான தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்.