பஸ்ஸில் சீட் பிடிக்க அரிவாள் போட்ட நபர்கள் - அதிர்ந்து போன பயணிகள்.. வைரலாகும் போட்டோஸ்
திரைப்படத்தில் பேருந்தில் பாம்பு போட்டு இடம் பிடிக்கும் காட்சி வருவது போல், பொள்ளாச்சியில் பேருந்தில் இடம்பிடிப்பதற்காக இரண்டு வீச்சரிவாள்களை போட்டுச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அச்சமடைந்த பயணிகள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அரிவாள்களை போட்டு சென்றது யார் ? என பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.