நகை கடை ஓனரை அடியாட்களுடன் வந்து தாக்கிய அரசியல் புள்ளி

Update: 2025-07-18 03:48 GMT

நகைக்கடை உரிமையாளரை தாக்கிய திமுக கவுன்சிலர்

திருமுல்லைவாயலில் நகை கடை உரிமையாளரை திமுக கவுன்சிலர் அடியாட்களுடன் வந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயல் CTH சாலையில் நகை கடை நடத்தி வருபவர் ராஜாராம்.இவரது கடையில் ஆவடி மாநகராட்சி 27 வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் கடந்த ஆண்டு இரண்டரை சவரன் நகையை 75 ஆயிரம் ரூபாய்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மூன்று மாதத்திற்கு முன்பு நகையை மீட்க சென்ற போது ராஜாராம் நகை இல்லை எனவும் அதற்கு பதில் பணம் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அடியாட்களுடன் கடைக்கு சென்று ராஜாராமை கன்னத்தில் அறைந்து கடைக்கு பூட்டு போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நகை கடை உரிமையாளர் ராஜாராம் கவுன்சிலர் வெங்கடேஷ் மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்