Thiruppattur | இளைஞர் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய விஷம் - பரிதாபமாக பிரிந்த உயிர்.. சோக சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஏரி கொடி பகுதியை சேர்ந்த 28 வயதான ஆறுமுகம்,கீரைக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்ததில் மயங்கி கீழே விழுந்த ஆறுமுகத்தை மீட்டு,உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இது உறவினர்களிடத்தில் மன வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.